தீபம் என்பது அனைத்து தெய்வங்களும் இருக்கக் கூடிய இடமாக திகழ்கிறது. இந்த தீபத்தை தான் நாம் அருட்பெருஞ்ஜோதியாக தரிசனம் செய்கிறோம், அதேபோல் திருவண்ணாமலை தீபமாகவும், மகரஜோதியாகவும் தரிசிக்கிறோம்.
பலவிதமான தெய்வங்கள் சூட்சுவமான முறையில் நமக்கு அருள் செய்யக் கூடிய வடிவமாக தான் இந்த தீபம் திகழ்கிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தீபத்தை நாம் ஏற்றுவதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும்.
என்ன காரியத்தை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்கிறோமோ அந்த காரியம் நிறைவேறும். மேலும் இந்த தீபத்தை ஏற்றும்பொழுது அதில் போடக்கூடிய திரி, ஊற்றக்கூடிய எண்ணெய், எந்த விளக்கில் ஏற்றுகிறோம் என்பதை பொறுத்து பலன்கள் என்பது மாறுபடும். இருப்பினும் தீபம் ஏற்றுவதற்கு உரிய பலன் என்பது கண்டிப்பான முறையில் கிடைக்கும். நம்முடைய வாழ்க்கை சிறப்பான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றாலும் நிறைவான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்றாலும் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்க வேண்டும் அல்லவா? அப்படி அனைத்து விஷயங்களும் கிடைப்பதற்கு எந்த வித குறையும் இல்லாமல் வாழ்வதற்கு எந்த எண்ணெயை பயன்படுத்தி தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
எந்த ஒரு எண்ணையை நாம் பயன்படுத்தி தீபம் ஏற்றினாலும் அந்த எண்ணெய் சுத்தமான எண்ணையாக இருக்க வேண்டும். மேலும் அது உண்ணத் தகுந்ததாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இப்பொழுது கூறக்கூடிய இந்த மூன்று எண்ணெய்களையும் சுத்தமான எண்ணெய்களாக வாங்கி கலந்து உபயோகப்படுத்த வேண்டும். மேலும் அது செக்கிலாட்டிய எண்ணையாக இருக்கும் பட்சத்தில் அதனுடைய பலனை முழுமையாக நம்மால் பெற முடியும். இதற்கு நல்லெண்ணெய், புங்கை எண்ணெய், இலுப்பை எண்ணெய் இந்த மூன்று எண்ணெய்களையும் சுத்தமான செக்கில் ஆட்டிய எண்ணெய்களாக வாங்கி சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எண்ணையை வீட்டிலும் தீபம் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். ஆலயத்திலும் தீபம் ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கூட்டு எண்ணையை முழுமனதோடு இறைவனை நினைத்து எந்த விளக்கில் வேண்டுமானாலும் எந்த திரியை போட்டு வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம். தொடர்ச்சியாக இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு இறையருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். மேலும் நம்முடைய வீட்டில் எவ்வளவு நேரம் தீபம் இருக்கிறதோ அவ்வளவு நேரம் தெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் அதன் மூலம் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் நம்மால் இயன்ற நேரம் வரை தீபத்தை வீட்டில் ஏற்றி எரிய வைத்து வணங்குவதன் மூலம் சிறப்பான வாழ்க்கையையும் தெய்வ அருளையும் பெற முடியும்.
எந்த ஒரு தெய்வ காரியத்தை செய்வதாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடனும், முழு மனதுடனும் எந்தவித சந்தேகமும் இல்லாமல் நிறைவாக செய்வதன் மூலம் நமக்கு நிறைவான வாழ்க்கை அமையும்.