இயேசுவின் பிறப்பும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் சிறப்பும்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் களைக்கட்டுகின்றன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இயேசுவின் பிறப்பு:

கபிரியேல் என்ற இறைத்தூதர், கன்னி மரியாளிடம் பரிசுத்த ஆவிமூலமாக இயேசு பிறக்கப்போவதை முன்னறிவித்தார். அச்சமயம் மரியாள் யோசேப்பு என்பவருக்கு மணமுடிக்க நிச்சயிக்கப் பட்டிருந்தார்.

மரியாள் கற்பமாயிருப்பதை தெரிந்து கொண்ட யோசேப்பு மரியாளை இரகசியமாக விலக்கிவிட நினைத்தார். இறைத்தூதர் யோசேப்புக்கு தோன்றி மரியாள் கருத்தரித்திருப்பது பரிசுத்த ஆவியினால் என்பதை தெரிவிக்கவே யோசேப்பு மரியாளை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

மரியாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பாலஸ்தீனத்தை ஆட்சி செய்த உரோமைப் பேரரசன் அகுஸ்துஸ் மக்கள் தொகை கணிப்பீடு ஒன்றை கட்டளையிட்டார். அவர் கட்டளைப்படி யோசேப்பும் மரியாளும் தங்களை பதிவு செய்ய யோசேப்பின் முன்னோரான தாவீதின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர்.

தங்குவதற்கு அறைகள் கிடைக்காத நிலையில் மாட்டுத் தொழுவமொன்றில் தங்கினார்கள். அம்மாட்டுத் தொழுவத்தில் மரியாள் இயேசுவை பெற்றார்.

இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அவர்கள் வானியலில் சிறந்து விளங்கிய பெர்சிய மத குருக்களான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்பது கிறிஸ்தவ மரபு. அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை கிறிஸ்துவின் மாஸ் (அல்லது இயேசு) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதுவரை கிறிஸ்துவின் உண்மையான பிறந்த தேதி இதுவரை தெரியவில்லை. இருந்தப்போதும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி என்று முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து பிற்காலத்தில் உலகளவில் இந்நாளில் இப்பண்டிகை கொண்டாடலாம் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதோடு இந்நாளில் வைக்கப்படும் கிறிஸ்மஸ் மரம் எப்போது வைக்க ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான தேதி என்பது தெளிவாக இல்லை என்றாலும், ஃபிர் மரங்களை ஆப்பிள்களால் அலங்கரிக்கும் முதல் நிகழ்வு என்பது கடந்த 1605 ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் நடந்ததாக வரலாறு கூறுகிறது. இதே போல் இந்நாளில் மெழுகுவர்த்திகளை முதன் முதலில் பயன்படுத்தி 1611 ல் சிலேசிய டச்சஸ் மூலம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்துக்களுக்கு எப்படி தீபாவளியை வெகுவிமர்சியாக கொண்டாடுகிறார்களோ? அதே போன்று தான் கிறிஸ்துவ மக்களுக்கு இயேசு பிறந்த தினமாக கிறிஸ்துமஸ். புத்தாடைகள் அணிந்து இரவில் மாஸில் கலந்துக் கொள்வார்கள். இறைவனுக்கு பிடித்த பாடல்கள் பாடுவது, வீடுகளில் குடிகளில் அமைப்பதோடு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து இந்நாளை மகிழ்வோடு கொண்டாடுவார்கள்.

கடவுளின் மகனாக கருதப்படும் இயேசு கிறிஸ்து பிறந்த நாளைக் குறிப்பது மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எப்படி வாழ்க்கையில் முன்னோக்கி பயணித்தார் என்பது குறித்து நினைவுக்கூரும் நாளாக டிசம்பர் 25 ஆம் தேதி பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கியநாளாக இது அமைகிறது என நம்புகின்றனர் கிறிஸ்துவ மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here