ஈப்போ, சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில், அனுமதியின்றி மின்னணு கழிவுகளைமறுசுழற்சி செய்ததாகக் கூறி இரண்டு மியான்மர் நாட்டவர்கள் உட்பட மூன்று நபர்களை பொது செயல்பாட்டுப் படை கைது செய்தது. உலுகிந்தா ஜிஓஎப் வடக்கு படைப்பிரிவு தளபதி ஷாஹ்ரம் ஹாஷிம், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஆய்வின் போது, அந்த தொழிற்சாலை சுற்றுச்சூழல் துறையின் உரிமம் அல்லது ஒப்புதல் இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டதாக கூறினார்.
தொழிற்சாலையில் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களிடம் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஆய்வின் போது, ஜிஓஎப் குழு 60.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின் கழிவுகளையும், இயந்திரங்கள் உட்பட பல பொருட்களையும் பறிமுதல் செய்தது, இவை அனைத்தும் 106.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ளவை கடந்த புதன்கிழமை தஞ்சோங் மாலிம், சுங்காயில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையிலும் தனது குழு சோதனை நடத்தி 19 வெளிநாட்டினரை கைது செய்ததாகவும் மொத்த பறிமுதல் 10.7 மில்லியன் ரிங்கிட் என்றும் ஷாஹ்ரம் கூறினார்.








