உறவினரின் திருமண நிகழ்வில் படுகர் நடனம் ஆடிய சாய் பல்லவி

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அமரன், தண்டேல் படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

படுகர் இனத்தை சேர்ந்த சாய் பல்லவி, கோத்தகிரியில் நடைபெற்ற தனது உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here