ஜெய், யோகி பாபு நடித்த ‘பேபி & பேபி’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ‘சுப்பிரமணியபுரம்’, ‘எங்கேயும் எப்போதும்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘பேபி & பேபி’ படம் வெளியானது. இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். காதலர் தினத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அழகான பேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள்.

இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 21-ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here