சாலை விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர்

இன்று காலை மணி மணி 7.46 அளவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் மணல் ஏற்றியிருந்த டிரெய்லர் லோரி ஒன்று பஞ்சு ஏற்றியிருந்த டிரெய்லர் லோரியின் பின்னால் மோதி தீப்பிடித்ததில் தந்தையும் அவரது மகனும் பரிதாபமாக உயிரிழந்தாக பேரா தீயைணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கைகளுக்கான துணை இயக்குநர் சுபரோட்ஷி நோர் அகமட் ( Subarodzi Nor Ahmad) தெரிவித்தார்.

தீக்குள்ளான மணல் லோரியில் 40 வயதுடைய லோரி ஓட்டுநர் சிக்கிக் கொண்ட வேளையில் அவரது 20 வயதுடைய மகனும் தீயில் சிக்கி இறந்தார்.

அவ்விருவரின் உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைத்ததாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here