அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிச் சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் கொடியின் சின்னத்தை அணிய வேண்டும்

அரசு பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளிச் சீருடைகளில் ஜாலூர் கெமிலாங் கொடியின் சின்னத்தை அணிய வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் கூறினார்

ஜாலூர் கெமிலாங் சின்னத்தை மாணவர்கள் அவர்களின் சீருடையில் அணிவதன் மூலம் நாட்டை நேசிக்கவும் சமூக நல்லிணக்கத்தை மேலோங்க செய்யவும் வழிவகுக்கும் என்று அமைச்சு எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்

மேலும் ஜாலூர் கெமிலாங் கொடி கொண்ட சின்னத்தை மாணவர்கள் தங்களின் பள்ளிச் சீருடையின் வலதுப்புறத்தில் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்

அனைத்து அரசாங்க பள்ளிகள், அரசாங்க உதவிப்பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி மையங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here