ஏப்ரல் 25 முதல் 28 வரை பினாங்கில், 60 மணி நேரம் அல்லது குறைந்தது இரண்டு நாட்களுக்கு மேல் திட்டமிட்ட நீர் வினியோக தடை ஏற்படவுள்ளது. இதனால் மாநிலத்திலுள்ள 341,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படலாம்.
பினாங்கு குடிநீர் நிறுவனம் (PBAPP) மாநிலத்தின் நீர் விநியோக அமைப்பை மேம்படுத்த 23 திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பினாங்கு முதல் அமைச்சர் சௌ கொன் இயோவ் கூறினார்.
இந்த பணிகள் 18 மணி நேரத்தில் முடிந்துவிடும். ஆனால் நீர் வினியோகம் மீண்டும் வழக்கத்திற்கு திரும்ப கூடுதல் நேரம் தேவைப்படும் என்று அவர் கொம்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய பொது தெரிவித்தார்.
இந்த திட்டங்களிள் அம்பாங் ஜாஜாரில் 360 மீட்டர் நீளமுள்ள சுங்கை பிறை இறுதி குழாய் இணைப்புப் பணி மற்றும் சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான குழாய் மேம்படுத்தல் பணி அடங்கும்.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் குழாய் அமைப்புகள் மற்றும் முதன்மை நீர் குழாய்களின் பழுதுபார்க்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று சௌ கொன் இயோவ் கூறினார்.









