Batman புகழ் ஹாலிவுட் நடிகர் வேல் கில்மர் காலமானார்

Batman மற்றும் Top Gun திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் வேல் கில்மர், அவரது 65 ஆவது வயதில் காலமானார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) நியூமோனியா காரணமாக லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அவர் காலமானதாக அவரின் மகள் மர்செடிஸ் கில்மர் தெரிவித்தார்.

Val Kilmer, iconic Top Gun and Batman actor, sadly dies aged 65 - Hull Live

ஏற்கனவே கில்மருக்குத் தொண்டை புற்றுநோய் இருந்தது 2014ஆம் ஆண்டு தெரியவந்தது. பின்னர் அவர் அதிலிருந்து குணமடைந்ததாக அவரது மகள் மேலும் கூறினார்.

கில்மர், 1995ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் ஃபரெவர்’ (Batman Forever) படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். முன்னதாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த மைக்கல் கீட்டனிடமிருந்து கில்மர் அந்தப் ‘பொறுப்பை’ எடுத்துக்கொண்டு ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தார்.

Val Kilmer: Top Gun, Batman and The Doors actor dies aged 65 - BBC News

மேலும், 1991ஆம் ஆண்டு வெளியான ‘தி டோர்ஸ்’ (The Doors) படத்தில் ஜிம் மோரிசன் என்ற கதாபாத்திரத்தில் அசத்தினார். ‘டாப் கன்’, ‘தண்டர்ஹார்ட்’ (Top Gun, Thunderheart) உள்ளிட்ட படங்களில் நடித்தும் பிரபலமாகத் திகழ்ந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here