மருத்துவமனைகளுக்கு நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து பரவிய தீ பாதிப்பு இல்லை

தாப்பா,

 கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா சிலாங்கூரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து தீ பரவிய சம்பவத்தால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமட் நேற்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. அந்த பகுதியில் உள்ள மருத்துவ சேவை மையங்களில் இந்த சம்பவத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.

இந்த வெடி விபத்து சம்பவத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மருத்துவ எரிவாயுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.

தாப்பா மருத்துவமனையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவர் இதனை தெரிவித்தார். இந்த வெடிச் சம்பவத்தால் மரணம் நிகழ்ந்திருக்கிறதா என்பது பற்றி சுகாதார அமைச்சுக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. அதுமட்டுமன்றி ஏராளமானோருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணி வரையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150 ஆக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

இவர்களுள் 112 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். 38 பேர் இன்னும் சிகிச்சைப் பெறுகின்றனர். இவர்களுள் 17 பேர் சுகாதார அமைச்சின் மருத்துவமனைகளிலும் 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட புதியவர்கள் யாரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படவில்லை என்று அவர் மருத்துவமனையில் ஒரே ஒரு நோயாளிதான் இன்னும் ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலையும் சீரடைந்து வருகிறது.

 பாதிக்கப்பட்ட 150 பேரில் 127 பேருக்கு தீக்காயம் உள்ளிட்ட உடல் மேலும் 18 பேருக்கு இந்தச் சம்பவத்துடன் தொடர்பு இல்லாத மனக் கவலை, மனப் பதற்றம், படபடப்பு, ரத்தக் கொதிப்பு ஆகியவை ஏற்பட்டிருந்ததாக அமைச்சர் விளக்கமளித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here