கோத்தா கினாபாலு:
கினாபடங்கான் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆரம்பப் பள்ளிகளில் பல மாணவர்களுக்கு கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பள்ளிகளை தற்காலிகமாக மூட மாநில கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
செக்கோலா கெபாங்சான் (SK) கோத்தா கினாபடாங்கான் மற்றும் SK பாரிஸ் 3 ஆகிய பள்ளிகளில் இந்த நோய்த்தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.
கிருமி நீக்கம் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டு முயற்சிகளை எளிதாக்குவதற்காக இரண்டு பள்ளிகளும் ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 29 வரை மூடப்படும் என்றும், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த மூடல் மேற்கொள்ளப்பட்டதாக சபா கல்வித் துறை இயக்குநர் டத்தோ ரைசின் சைடின் தெரிவித்தார்.









