கோலா திரெங்கானுவில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி முதியவர் மரணம்

கோலா திரெங்கானு:

நேற்று இரவு பெங்கலான் ஆராங்கில் நான்கு சக்கர வாகனம் மோதியதில் 77 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் அலி முகமட் என அடையாளம் காணப்பட்டார், அவர் ஹோண்டா வேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சம்பவ இடத்தில் ஃபோர்டு ரேஞ்சர் வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அதேநேரம் வாகன ஓட்டுநர் காயமடையவில்லை என்று, கோலா திரெங்கானு காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நூர் கூறினார்.

இரவு 9.35 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர் தொழுகை முடிந்து சூராவிலிருந்து திரும்பி வந்ததாக நம்பப்படுகிறது. அவரது உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனை (HSNZ) தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here