நியூசிலாந்தில் மேற்கு கடற்கரை பகுதியில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை.
அமெரிக்க புவியியல் கண்காணிப்பு நிலையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் நியூசிலாந்து நேரப்படி அதிகாலை 1 மணிக்கு ஏற்பட்டது. இது இன்வர்கார்கில் ( Invercargill) நகரத்திற்கு தென்மேற்கே 300 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.









