360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்கள்; டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்கள் எம்ஏசிசி கைது

சுமார் 360 மில்லியன் ரிங்கிட்டிற்காக தவறான ஆவணங்களை சமர்ப்பித்ததன் சந்தேகத்தின் பேரில், டத்தோஸ்ரீ உட்பட நான்கு நபர்களைக் எம்ஏசிசி கைது செய்துள்ளது.

நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி புலனாய்வுப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ ஜைனுல் தருஸைத் தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்

முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர்கள் 2016 முதல் 2017 வரையில் இந்தச் செயல்களைச் செய்து வந்ததாக நம்பப்படுகிறது.

மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 1.30 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நெடுஞ்சாலை கட்டுமானத் திட்டத்தில் சுகுக் (Sukuk) நிதியைப் பயன்படுத்தி சுமார் 360 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தவறான உரிமைகோரல்களை நான்கு சந்தேக நபர்களும் சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here