பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், Jalan Machang Bubok-கில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி Honey368 உணவகத்தில் சித்தார்த்தன் சசிபாலன் எனும் 9 வயது சிறுவன் மீது, சீன உணவகப் பணியாளர் கொதித்த நீரை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இநிலையில், அச்சிறுவனின் முகம், கழுத்து மற்றும் உடலில் மோசமான தீப்புண் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் நடந்து உடனடியாக புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்குக் அச்சிறுவன் கொண்டுச் செல்லப்பட்டு, காயங்கள் மிகவும் மோசமாக இருந்ததால், பின்னர் உடனடியாக தோல் அறுவை சிகிச்சைக்காக பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான்.
அச்சம்பவத்துக்குக் காரணமானவர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும் இச்செய்தியைப் பகிர்ந்து தங்களுடன் துணை நிற்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அச்சிறுவன் விரைந்து குணமடைந்து வர வேண்டுமென்றும் லிங்கேஷ் பிராத்தித்தார்.








