புத்ரா ஹைட்ஸில் தீப்பிடித்து வெடித்த மூன்று எரிவாயு குழாய்கள் விசாரணை நோக்கங்களுக்காக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவுள்ளது

ஏப்ரல் 1 ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் தீப்பிடித்து வெடித்த மூன்று எரிவாயு குழாய்கள் விசாரணை நோக்கங்களுக்காக சம்பவ இடத்திலிருந்து அகற்றப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் கூறினார்.

இதில் 32 அங்குல அகலமுள்ள இரண்டு குழாய் துண்டுகள் ஆறு மீட்டர் நீளத்திற்கும் மற்றொரு குழாய் நான்கு மீட்டர் நீளத்திற்கும் வெட்டப்பட்டன.

இதுவரை, எரிவாயு குழாய் வெட்டப்பட்ட மொத்த நீளம் 16 மீட்டர் ஆகும். மீதமுள்ள பகுதியை வெட்டுவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார் அவர்.

வெட்டப்பட்ட குழாய்தான் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த சம்பவத்தில் வெடித்தது கண்டறியப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள மூன்று முக்கிய குழாய்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here