அமெரிக்கா விதித்துள்ள வரியால் Apple நிறுவனத்திற்கு சுமார் 900 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.
இதனால் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான iPhone திறன்பேசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படலாம் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook) கூறியுள்ளார்.
தற்போதைக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆகக் கடுமையான வரிகளிலிருந்து Apple கருவிகளுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான iPhone திறன்பேசிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.
இந்தியாவில் iPhone திறன்பேசிகளின் தயாரிப்பு அதிகரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் விற்கப்படும் கிட்டத்தட்ட அனைத்து iPad, Mac, Apple Watch, AirPod சாதனங்களும் வியட்நாமில் செய்யப்பட்டவையாக இருக்கும் என்று கூறினார்.










