சிரம்பான்,
மலேசியாவின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், மாட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட், சிரம்பான் மற்றும் பாண்டார் ஸ்ரீ செண்டாயனில் பெரிய அளவிலான “ஜாலூர் ஜெமிலாங் கொடிஏற்றும் இயக்கத்தை” ஆரம்பித்தது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 5,000 ஜாலூர் ஜெமிலாங் தேசியக்கொடிகள், ஜூலை மாதம் முழுவதும், 81 பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. நிறுவனங்கள், பள்ளிகள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் சமுதாய அமைப்புகள் தங்களது வளாகங்களில் தேசியக்கொடியை பறக்கவிட ஊக்குவிக்கப்பட்டன.
இந்த இயக்கம், MATRIX CONCEPT நிறுவனத்தினரால் நேரடியாக வழங்கப்பட்ட ஒப்பந்த நிகழ்வுகளுடன் நடைபெற்றது. தேசிய ஒற்றுமை, உரிமை உணர்வு மற்றும் பிணைப்பை வலுப்படுத்தும் நோக்குடன் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய பெறுநர்களில், சிரம்பான் மாநகரமன்றம், (MBS), போர்ட்டிக்சன் நகராண்மை கழகம் (MPPD), அரச மலேசியா விமானப்படை (TUDM) செண்டாயான், சிரம்பான் மாவட்ட காவல்துறை, லாபு மற்றும் மம்பாவ் காவல்நிலையங்கள் மற்றும் நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஆகியவையும் அடங்கும்.
மேலும், கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு அமைப்பு (JPKK), அண்டை பள்ளிகள் (Adcote Matrix Malaysia உட்பட), பல்வேறு சமய நல்லிணக்க நிறுவனங்கள் மற்றும் 50 குடியிருப்பு சங்கங்களுக்கும் கொடிகள் வழங்கப்பட்டன. இது மூலம் ஒற்றுமை உணர்வை சிரம்பான் மற்றும் அதன் சுற்று வட்டார சமூகங்களில் மேலோங்கச் செய்தது.
மேலும், பாண்டார் ஸ்ரீ செண்டாயான் நகரில் கூடுதல் 1,000 தேசியக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டு, நகரத்தின் தோற்றத்தை தேசிய ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் மாற்றின.
இதனிடையே “ஜாலூர் ஜெமிலாங் என்பது நம்முடைய பன்முகத்தன்மை கொண்ட தேசிய அடையாளத்தின் அடையாளமாகும்,” என மாட்ரிக்ஸ் கான்செப்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் பெர்ஹாட் குழும நிர்வாக இயக்குநர் மிஸ்டர் கல்வின் லீ தெரிவித்தார். மேலும் “இந்த இயக்கத்தின் மூலம் மக்கள் ஒன்றுபட்டு, சுதந்திர உணர்வுடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடச் செய்கின்றோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக, 1 ஆகஸ்ட் 2025 அன்று, அனைத்து கொடிகளும் ஒரே நேரத்தில் உயர்த்தப்பட்டன. இது பாண்டார் ஸ்ரீ செந்தாயான் மற்றும் சுற்றுப்புற சமூகங்களில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது.




















