கிள்ளான்: கடந்த ஏப்ரல் மாதம் செமினியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பெண்ணும் அவரது உறவினர் இறந்ததற்கு பிளாஸ்டிக் பைகளை கொண்டு ஏற்படுத்தப்பட்ட மூச்சுத் திணறலே என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட இருவரின் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டிசிபி முகமட் ஜைனி அபு ஹாசன் தெரிவித்தார்.
செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், பிளாஸ்டிக் பையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் தான் மரணத்திற்கான காரணம் என்று கண்டறியப்பட்டது என்று அவர் செவ்வாய்க்கிழமை (மே 6) தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார். ஏப்ரல் 26 அன்று, செமினியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் காரணமாக 53 மற்றும் 25 வயதுடைய இரண்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.









