200-க்கும் மேற்பட்ட மருத்தவர்கள் மற்றும் தனியார் பொது மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தனியார் சிகிச்சை மையங்களில் மருந்து மாத்திரைகளின் விலைகளைப் பார்வைக்கு வைப்பதை கட்டாயம்படுத்தியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து, இன்று காலை 9.30 மணியளவில், புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகேயுள்ள லாமன் பெர்டானாவில் (Laman Perdana) சுமார் 200-க்கும் மேற்பட்ட மருத்தவர்கள் மற்றும் தனியார் பொது மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் பத்துப் பேர் பிரதமர் அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு, காலை 10.30 மணியளவில் மனுவொன்றை ஒப்படைத்தனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கெடா, பினாங்கு, பேராக், கிளாந்தான் மற்றும் சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ளாதாக MMA தலைவர் டாக்டர் பர்ம்ஜித் சிங் (Parmjit Singh ) கூறினார்.

மருத்துவர்கள் மருந்து விலையை பார்வைக்கு வைக்கும் விதிமுறைக்கு எதிராக அல்ல, ஆனால் அந்த விதி சுகாதாரத்துறையுடன் தொடர்பில்லாததால் அவற்றை Private Healthcare Facilities and Services Act 1998 கீழ் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்கள்.

மேலும் இது வெறும் அடையாள மறியல் அல்ல; நாங்கள் தொடர்ந்து செயல்பட அரசாங்கத்திடம் வைக்கும் முறையீடு என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here