கோலாலம்பூர்,
கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி நடந்த Magnum குலுக்கலில் பட்டர்வொர்த்தைச் சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் முதல் பரிசான 11 மில்லியன் சிங்கிட்டை தட்டிச் சென்றார். அவ்வப்போது Magnum 4D Jackpotடில் பந்தயம் கட்டி வந்தவருக்கு இந்த பண அதிர்ஷ்டம் தன் மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற ஏதுவாக அமைந்ததை நினைத்து உணர்ச்சி வசப்பட நாமும் சற்று கலங்கித்தான் போனோம்.
அந்த அதிர்ஷ்டசாலி சிறு முதலீட்டினை கொண்டு பல லட்சம் சிங்கிட் பரிசுகளை வென்ற அநேக கதைகளை கேட்டு அந்த ஆர்வத்தில் ஒரு மெல்லிய நம்பிக்கையுடன்” இதுநாள் வரையில் பந்தயம் கட்டி வந்துள்ளார். இம்முறை சற்று வித்தியாசமாக ஒரு நண்பரின் தூண்டுதலுக்கு இணங்க ஒரு சாஸ்திர நிபுணரை சந்தித்துள்ளார். அவரோ விரைவில் உறவினர் வீட்டிற்கு செல்ல நேர்ந்தால் அங்குள்ள எண்களை கவனிக்கும்படி கூறியுள்ளர். அதன்படி எண்களை கவனித்து பந்தயம் கட்டியதில் தனக்கு இந்த பரிசு மழை விழுந்துள்ளது என்று விவரித்தார்.
அவரது பந்தய எண்கள் 8583 + 1599 ஆகும். அன்றைய இரவு குடும்பமாக அமர்ந்து Magnum குலுக்கலை நேரலையாக கண்டு களித்திருந்த வேளையில் முதலில் அவர் பந்தயம் கட்டிய எண்கள் சிறப்பு பரிசில் இடம் பெற்றதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர், சிறிது நேரத்தில் அவை முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களை பிடித்ததும் அவர்களது மகிழ்ச்சி இரட்டிப்பாகி விட்டதாக அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இவரது பந்தயம் கட்டும் பழக்கத்தை அவ்வளவாக விரும்பாத அவரது மனைவிகூட மகிழ்ச்சியில் திளைத்துவிட்டாராம். இந்தப் பரிசு மழை தனது பணக்கஷ்டத்தை போக்குவதோடு மட்டுமல்லாமல் தனது மனக்கஷ்டத்தையும் சேர்த்து போக்கிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து Magnum நிறுவன பிரதிநிதி கூறியதாவது எங்களது வாடிக்கையாளர்கள் பணப்பரிசு பெறும்போது ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் அவர்களது இதுபோன்ற நம்பிக்கை வைப்பது, வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவது. அன்பை பரிமாறுதல் போன்ற உருக்கமான கதைகளை கேட்கும்போது முழு நிறைவு கிடைக்கிறது என்றார்.








