54,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக பொது சுகாதார அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ் டவுன்: பினாங்கு மாநகர  மன்றத்தில் பணியாற்றும் இரண்டு பொதுச் சுகாதார அதிகாரிகள், ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து 54,000 ரிங்கிட் லஞ்சத் ­ தொகையை பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், மே 7 (புதன்கிழமை) முதல் மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சார்பில் செய்யப்பட்ட மனுவின் பேரில், பினாங்கு அமர்வு நீதிமன்ற நீதியரசர் ஸுரைதா அப்பாஸ் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.

30 மற்றும் 60 வயதுடைய இந்த இரு ஆண்கள், 2024ஆம் ஆண்டு ஜனவரியில்  நிர்வகிக்கப்படும் ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து, 2024 சீனப் புத்தாண்டு விழாவின் போது தற்காலிக ஹாக்கர் கடைகளுக்கான உரிமங்களை வழங்குவதற்காக இந்த ஊழல் தொகையை கோரி பெற்றதாகக் கூறப்படுகிறது.

இருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பினாங்கு MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர் என ஒரு வட்டாரத் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், MACC பினாங்கு இயக்குனர் டத்தோ முகமட் ஃபுவாட் பீ பஸ்ரா, இந்த இருவரும் கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார். இந்த வழக்கு, 2009 ஆம் ஆண்டு MACC சட்டத்தின் பிரிவு 16(a)(B) கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here