மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று இஸ்தானா புக்கிட் துங்குவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்ட பதிவின்படி, பிரதமர் சமீபத்திய முன்னேற்றங்கள், தற்போதைய பிரச்சினைகள் குறித்து மாட்சிமை கேட்டறிந்ததாக அறியப்படுகிறது.








