நகராண்மைக் கழகத்தின் மீடு ஏற்பட்ட அதிருப்தியில் அலுவலகத்தின் கண்ணாடி கதவு உடைப்பு

தெலுக் இந்தான் நகராண்மைக் கழகத்தின் மீடு ஏற்பட்ட அதிருப்தியின் காரணத்தால் 63 வயது முதியவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கண்ணாடி கதவை சுத்தியால் உடைத்துள்ளார்.

சம்பவம் நேற்று காலை 10.15 மணியளவில் நிகழ்ந்ததாக தெலுக் இந்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் டாக்டர் பக்ரி சைனல் அபிடின் (Dr Bakri Zainal Abidin) கூறினார் . தனது மோட்டார் சைக்கிளாள் வந்த நபர், ஒரு இரும்பு சுத்தியால் இரு கதவுகளை உடைத்து, பின்னர் ஜாலான் பண்டாரில் உள்ள தனது கடைக்குச் செல்ல முயன்றபோதும், நகராண்மைக் கழக ஊழியர்கள் அவரை தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியின் போது, தனது கடையின் முன் நகராண்மைக் கழக குழுவால் அமைக்கப்படும் கூடாரம், வாடிக்கையாளர்கள் கடையை காணும் வசதியை தடுக்கிறது என்பதாலேயே இந்தச் செயலுக்கு உட்பட்டதாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவர் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக அவர் விசாரிக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here