கார்னிவல் ஸ்டெம் லஹாட் டத்து 2025: 1,000 மாணவர்களையும் பொதுமக்களையும் ஈர்த்தது.

லாஹாட் டத்து,

தேசிய பிளானேட்டரியம், தேசிய வகை சின் வா சீனப்பள்ளி, சபா மலாயாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு சின் வா சீனப்பள்ளியின் 2025 மே 5ஆம் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை கார்னிவல் ஸ்டெம் லஹாட் டத்து 2025 (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியானது லாஹாட் டத்து மாவட்டம் முழுவதிலுமிருந்து 1,000 மாணவர்களையும் பொதுமக்களையும் ஈர்த்தது. ஆசிரியர்களுக்கான பட்டறை.

தொழில் வாய்ப்பு, கருத்தரங்கு உட்பட சூரியன் பற்றிய செய்திகள், தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. ஆக்கத்திறன்கள், மலேசிய மடானியின் பிரதான இலக்காக இருப்பதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறைவில் உரையாற்றிய தொழில்நுட்பம், அறிவியல் புத்தாக்கத்துறை அமைச்சின் (MOSTI) துணை அமைச்சர் டத்தோ ஹாஜி முகமட் அப்டால் பிளானேட்டரியம் நெகாரா அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், வானசாஸ்திரம், விண்வெளி அறிவியல் ஆகியவற்றில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வை அதிகரிக்கச் திட்டங்களை நடத்துவதில் முழு செய்யும் பல்வேறு கல்வித் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்று சொன்னார்.

அதேசமயம் அறிவியல் என்பது வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமல்ல. நம்முடைய வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கும் ஓர் அற்புத சக்தி என்பதை சுட்டிக்காட்டிய அவர், வரும் தலைமுறையினருக்கு ஸ்டேம்ப் துறைகளில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அதிகரிக்கச் செய்வதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அவசியம் என்றார். 

இத்துறையில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். இவர்கள்தாம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது உறுதி செய்யப்படுவதற்கு நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் ஹாஜி முகமட் யூசோப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here