கூலாய் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 34 ஆவது கிலோமீட்டரில் நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த வேளை 15 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில் கொள்கலன் லோரி, Toyota Estima, Mazda 5 ஆகிய இரு MPV வாகனங்கள் மற்றும் Toyata Hilux நான்கு சக்கர வாகனம் ஆகியவை சம்பந்தப்பட்டன.
Gee yin Chin என்ற 42 வயது பெண்ணும்,அடையாளம் காணப்படாத மற்றொரு பெண்ணும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் MPV வாகனத்தில் இருந்த இதர மூன்று பயணிகளும் மற்றும் கொள்கலன் லோரி ஓட்டுனரும் காயம் அடைந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் தலைவர் Mohd Firdaus தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் வாகனங்களில் இருந்தவர்களை வெளியேற்றி அவர்களுக்கு முதலுதவி வழங்கினர்.









