முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அரச மன்னிப்பு பெறுவதற்கு இந்திய சமூகத்தினர் ஆதரவு

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் அரச மன்னிப்பு பெறுவதற்கு மேற்கொண்டிருக்கும் முயற்சிக்கு பெரும்பான்மையான இந்திய சமூகத்தினர் ஆதரவு வழங்கியுள்ளதாக மெர்டேக்கா சென்டர் ஆய்வு தெரிவித்தது.

புரோஜெக் சமா PROJEK SAMA என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மார்ச் 27 முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை சுமார் 1,210 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இதில் மலேசிய இந்தியர்களில் 62.2 விழுக்காட்டினர் இந்த அரச மன்னிப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இருப்பினும் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படக் கூடாது என்று 57.8 விழுக்காட்டினர் தங்களின் எதிர்ப்பினையும் பதிவு செய்துள்ளனர்.

இந்தியர்களுக்கு அடுத்து பூமிபுத்ரா சமூகத்தினர் பெருவாரியாக நஜிப்பிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here