ஒன்பது மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – மெட் மலேசியா

நாட்டிலுள்ள ஒன்பது மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பினாங்கு, பெர்லீஸ், கெடா, பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கடுமையான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கூட்டரசு பிரதேசமான லாபுவான் மற்றும் சபா மாநிலத்தில் உள்ள சில இடங்களிலும் மோசமான வானிலை ஏற்படும் என்று மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் அண்மைய வானிலை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள பொதுமக்கள் மெட் மலேசியாவின் சமூக ஊடகங்களை வலம் வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here