ஸ்ரீ காடிங் எம்.பி.யின் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

கோலாலம்பூர்:

ஜோகூரில் கடந்த சனிக்கிழமை ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான அதிகாரப்பூர்வ வாகனத்தை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக காவல்துறை 37 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர், ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினரின் சேவை மையத்தில் நின்ற குறித்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பத்து பஹாட் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.

“அந்த நபர் அதே நாள் பிற்பகல் 3 மணியளவில் டோங்காங் பெச்சா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

“சம்பவத்தின் போது சந்தேக நபர் பயன்படுத்திய வாகனம், உடைகள் மற்றும் கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here