மீண்டும் நடிக்க வந்த எமி ஜாக்சனின் நெகிழ்ச்சி

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். தமிழில் ‘மதராசபட்டினம்’ படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி,2.0, உள்பட படங்களில் நடித்தார். இதற்கிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை எமி நிச்சயதார்த்தம் செய்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் எனவும் பெயரிட்டு வளர்த்து வந்தனர். ஆனால், திருமணத்திற்கு முன்பாகவே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

பின்னர் எமி ஜாக்சன் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், நடிகை எமி ஜாக்சன் – எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் சூட்டியுள்ளனர். தன் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த எமி ஜாக்சன் தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்

இதனைத் தொடர்ந்து ஏமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “சுமார் ஒரு வருஷத்துக்கு பிறகு மகனை பிரிந்து முதல்முறையா வேலைக்கு செல்வது ரொம்ப கஷ்டமாக உள்ளது. எப்ப வீடு திருப்பி மகனை பார்க்கபோறோம்னு ஏக்கமாக உள்ளது. இந்த பிரிவு, கஷ்டம் எல்லாமே மகனுக்காகதான் என்பதை நினைக்கும்போது சற்று ஆறுதலா இருக்கிறது”

இவ்வாறு ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here