46ஆவது உச்சி மாநாடு வரும் 26ஆம் தேதி தொடங்கப்படவுள்ள வேளையில் கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலங்களில் மொத்தம் 71 பள்ளிகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் இன்று சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதே வேளை கற்றல் நல்வாழ்வு பாதுகாக்க வீட்டிலேயே கற்றல் – கற்பித்தல் (PdPR) திட்டம் செயல்படுத்தப்படும். இதன் தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கல்வி அமைச்சகம் அனுப்பி வைக்கும். மேலும் இந்த கற்றல் முறையை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி ஊழியர்கள் அறிந்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளிகள் மூடப்படும் அதே வேளை ஆசியான் உச்சி மாநாட்டை முன்னிட்டு சில சாலைகளும் மூடப்படும். எந்தெந்த சாலைகள் மூடப்படும் என்ற தகலவ்கள் சம்பந்தப்பட்ட துறையினரால் விரைவில் வெளியிடப்படும்.