லண்டன்:
பிரிட்டன் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக உக்ரைனைச் சேர்ந்த 21 வயது இளைஞரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமராக ஸ்டாமர் உள்ளார். இவர், தலைநகர் லண்டனில் உள்ள டவுனிங் தெருவில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், வடக்கு லண்டனில் உள்ள அவரது சொந்த வீட்டில் கடந்த 12ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனினும், வீட்டின் முன் பகுதி சேதமடைந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



















