PTPTN நிர்வாகத்தினரின் பரிவு வருகை உயிரிழந்த எஃப்ஆர்யு அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு கல்வி உத்தரவாதம் .

PTPTN எனப்படும் தேசிய உயர்கல்வி அறவாரியம் தன்னுடைய பரிவு வருகைத் திட்டத்தின் கீழ் அண்மையில் ஒரு கொடூர ‘சாலை விபத்தில் உயிரிழந்த 5 எஃப்ஆர்யு அதிகாரிகளின் இல்லங்களுக்கு வருகை புரிந்து அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்கு உத்தரவாதம் வழங்கியது.

PTPTN தலைவர் டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம், அதன் நிர்வாக வாரிய உறுப்பினர் டத்தோ டாக்டர் அமினுஷன் முகமட் ஹனாஃபியா, அதன் தலைமைச் செயல் அதிகாரி மஸ்தூரா பிந்தி முகமட் காலிட் ஆகியோர் அந்த ஐவரின் இல்லங்களுக்கு வருகை புரிந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதேசமயம் பிடிபிடிஎன் சமூக கார்ப்பரெட் பொறுப்புடைமையின் கீழ் மொத்தம் 15 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

பேராக் கம்போங் ஈத்தேக்கில் உள்ள காலஞ்சென்ற கார்ப்பரல் அமிருடின் ஸப்ரியின் இல்லத்திற்கு வருகை புரிந்த பிடிபிடிஎன் தலைமைச் செயல் அதிகாரி புவான் மஸ்தூரா அமிருடினின் துணைவியாரிடம் சிம்பான் எஸ்எஸ்பிஎம் தக்காஃபுல் காப்புறுதித் பெற்றிருக்கின்றனர். தொகைக்கான மாதிரி காசோலையை வழங்கியபோது…

ஒரு பிள்ளைக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் என்ற முறையில் ஆயிரம் ரிங்கிட் சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரங்கள் வடிவில் வழங்கப்படும் என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா அப்துல் ரஹிம் தெரிவித்தார். அதேசமயம் காலஞ்சென்ற முகமட் ரோஸ்லான் பின் அப்துல் ரஹிம், காலஞ்சென்ற அமிருடின் பின் ஸப்ரி ஆகியோரின் இரண்டு வாரிசுகளுக்கு தக்காஃபுல் காப்புறுதியும் இறப்புச் சகாய நிதியும் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

முகமட் ரோஸ்லான் (வயது 46) எஃப்ஆர்யு எனப்படும் மத்திய சேமப்படையின் சார்ஜண்ட் பதவி வகித்தவர். இவர் 2025 மே 7ஆம் தேதி சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம் திட்டத்தில் வைப்புத்தொகை செலுத்தி சேமிப்புக் கணக்கைத் தொடங்கியவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவர் தக்காஃபுல் பாதுகாப்பு நிதியாக ஆயிரம் ரிங்கிட், மரணச் சகாய நிதியாக ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் 4 ஆயிரம் ரிங்கிட் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ நோர்லிஸா குறிப்பிட்டார்.

 

இவர் 2019 மார்ச் 31ஆம் தேதி தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கைத் தொடங்கினார். மாதம் 30 ரிங்கிட் செலுத்தும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். இதன்வழி ஒவ்வொரு பிள்ளைக்கும் 60 ஆயிரம் ரிங்கிட் என்ற முறையில் மூன்று பிள்ளைகளும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட்டைப் பாதுகாப்புத் தொகையாக பெறுவர்.

மேலும் இறப்புச் சகாய நிதியாக இந்த மூன்று பிள்ளைகளும் மொத்தம் 30 ஆயிரம் ரிங்கிட் என ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரிங்கிட்டைப் பெறுவதற்குத் தகுதி சிம்பான் எஸ்எஸ்பிஎம் பிரைம், சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிளஸ் ஆகியவற்றையும் சேர்த்து ஆகமொத்தம் ஒரு லட்சத்து 93 ஆயிரம் ரிங்கிட்டை அவர்கள் பெறுவர் என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா தெரிவித்தார்.

அதேசமயத்தில் காலஞ்சென்ற கார்ப்பரல் அமிருடின் பின் ஸப்ரி (வயது 38), 2025 மே 7ஆம் தேதி அவரின் பெயரில் சிம்பான் எஸ்எஸ்பிஎன் பிரைம் திட்டத்தில் கணக்கைத் திறந்தார். இவரின் குடும்பத்தார் தக்காஃபுல் காப்புறுதித் தொகையாக ஆயிரம் சிங்கிட் மேலும் மரணச் சகாய நிதி 3 ஆயிரம் ரிங்கிட் என மொத்தம் 4 ஆயிரம் சிங்கிட் பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கின்றனர்.

அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு தக்காஃபுல் காப்புறுதிப் பலன்கள் பெறுவதற்கு வசதியாக பிடிபிடிஎன் அதன் சமூகக் கடப்பாட்டு பொறுப்புடைமைத் திட்டத்தின் கீழ் இந்த உதவிகளை வழங்கி அந்தக் குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் என்று டத்தோஸ்ரீ நோர்லிஸா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here