பறிமுதல் செய்யப்பட்ட 124 வாகனங்களை பொது ஏலத்தில் விட்டு RM237,000 திரட்டியது KL JPJ

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), பறிமுதல் செய்யப்பட்ட 124 வாகனங்களை பொது ஏலத்தில் விட்டு சுமார் RM237,000 வசூலித்துள்ளது.

ஏலம் விடப்பட்ட 124 வாகனங்களில் 108 வாகனங்கள் இன்னமும்பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளவை, ஏனைய 16 வாக்கங்கள் சாலைப் பயன்பாட்டிற்கு ஏற்றவை அல்ல (ஸ்கிராப்), அதில் 6 வாகனங்கள் குளோன் செய்யப்பட்ட வாகனங்கள் என்று அதன் இயக்குனர் ஹமிடி ஆடம் கூறினார்.

“நேற்று மொத்தம் 124 வாகனங்களையும் நாங்கள் வெற்றிகரமாக ஏலத்தில் விட்டோம் , அதிகபட்ச ஏலம் மிட்சுபிஷி கேன்டர் டிப்பர் டிரக்கிற்கு RM27,000 கிடைத்தது, அதேநேரம் குறைந்தபட்ச ஏலம் ஸ்கிராப் மொடெனாஸ் மோட்டார் சைக்கிளுக்கு RM200 கிடைத்தது,” என்று அவர் கூறினார்.

சாலை வரி மற்றும் காப்பீடு இல்லாதது உள்ளிட்ட குற்றங்கள் சம்பந்தப்பட்ட இந்த வாகனங்கள், பல்வேறு JPJ அமலாக்க நடவடிக்கைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

“மூன்று மாதங்களுக்குள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் உரிமை கோரத் தவறினால், குறித்த வாகனங்களை ஏலம் விடப்படுவதற்கு முன்பு நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படும் ,” என்று அவர் மேலும் கூறினார்.

பொதுவாக இந்த வகையான ஏலம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது என்றும், இந்த முறை 85 ஏலதாரர்கள் பங்கேற்றிருந்தனர் என்றார்.

கலந்துகொண்ட அனைத்து ஏலதாரர்களுக்கும் தேவைப்படும் RM100 மதிப்புள்ள சிறு புத்தகங்களின் விற்பனையிலிருந்து கூடுதலாக RM8,500 வசூலிக்கப்பட்டது, இதன் மூலம் மொத்த வருவாய் RM245,500 ஆகக் பதிவானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here