தாய்லாந்தில் விழுந்து நொறுங்கிய காவல்துறை ஹெலிகாப்டர்; மூவர் பலி

பேங்காக்:

தாய்லாந்தில் காவல்துறை ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி வெடித்தது.

இந்த விபத்தில் விமானிகள் இருவரும் பழுதுபார்ப்புப் பணியாளர் ஒருவரும் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டரில் வெடித்ததால் மூண்ட தீயை தீயணைப்பாளர்கள் அணைத்ததாக மீட்புப் பணியாளர்கள் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். ஆனால், இச்சம்பவத்துக்குப் பின்னால் உள்ள காரணம் இன்னும் தெரியவில்லை.

சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் காவல்துறைத் தலைவர் கிட்ராட் பன்ஃபெட் உத்தரவிட்டார் என்று தாய்லாந்து தேசிய காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here