சைஃபுதீனின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டது

கோலாலம்பூர்:

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் கணக்கு இன்று அதிகாலை பொறுப்பற்ற தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியது, மேலும் இது குறித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

“இதன் காரணமாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அமைச்சரைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் நபர்களிடமிருந்து வரும் செய்திகள் அல்லது அழைப்புகளால் ஏமாறக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அது மேலும் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here