ஜோகூர் பாரு:
ஜோகூரில் நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று நள்ளிரவில் நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்பும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஒன் ஹபீஸ் காசி தெரிவித்தார்.
நீர்ப் பம்புகள் சரி செய்யப்பட்டு, படிப்படியாக நீர் விநியோகம் சீரடைந்து வரும் நிலையில், இன்றிரவுக்குள் அனைத்து நீர் தடைகளும் தீர்க்கப்படும் என்றும், ஜோகூர் பாருவில் உள்ள அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்” என்று இன்று வெள்ளிக்கிழமை (மே 23) மடானி ராக்யாட் இளைஞர் அணியின் நிகழ்வில் அவர் கூறினார்.
மேலும் சில வீடுகளுக்கு மூன்று நாட்களாக தண்ணீர் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை (மே 23) Sg ஜோகூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவைத் தொடர்ந்து, நீர்க் குழாய்களை மறுசீரமைக்கும் பணி தொடங்கியதாக ரன்ஹில் எஸ்ஏஜே தலைமை இயக்க அதிகாரி கைருல் எஃபெண்டி துசாம் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு மற்றும் இஸ்கண்டார் புத்திரியில் சுமார் 150,000 பயனர்களை இந்த தண்ணீர் வெட்டு பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















