சமூக ஊடகங்கள் கொண்டாடும் வேடன்; யார் இவர்?

கோலாலம்பூர்:

மலையாளி தந்தைக்கும்- இலங்கைத் தமிழ் தாயிற்கும் பிறந்த கிரண் தாஸ் முரளி எனும் வேடன், அவன் பள்ளியில் படிக்கும் போது அவனது கரு நிறத்தை வைத்து அவனுக்கு வேடன் என்று பட்டப்பெயர் சூட்டினர். ஆதிக்க சாதிகளின் இழி சொல்லுக்கு ஆளானான் வேடன்.

எது அவனை ஒதுக்கியதோ அதனை அடக்க அவன் கையில் எடுத்ததோ கலை. சிறு வயதிலிருந்தே எழுதுவதும் பாடுவதும் அவனுக்கு நன்கு வசப்பட்டது.

இப்போது வேடனில் பாடல்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ளன. வேடனை இப்போது உலகமே கொண்டாடுகிறது.

மஞ்சுமல்பாய்ஸ் திரைப்படத்தில் வேடன் எழுதிப் பாடிய பாடல், பட்டி தொட்டி எங்கும் பரவி, அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

தற்போது கேரளாவின் பேரன்பு பெரும் புயலாகி விட்டான் வேடன். ஓரிரவில் சமூக ஊடகங்களின் (Trending) பேசு பொருளாகி விட்டான்.

ஒடுக்கப்பட்டவன் மேல் எழுந்தால் அவனை அடக்க முடியாது என்பதற்கு வேடனே நல்ல உதாரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here