ஒப் கிந்தா வழி தேசிய நிதி உயர்நெறி வலுப்படுத்தப்படும் .

ஈப்போ.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு 2025 கள நடவடிக்கையை ஹசில் (HASI) எனப்படும் மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் ஒப் கிந்தா என்ற அடைமொழியுடன் மேற்கொண்டுள்ளது. இந்த 7ஆவது நடவடிக்கை 2025 மே 27 தொடங்கி மே 30ஆம் தேதி வரை பேராக் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் என்று வாரியத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி” (நிர்வாகம்) கைருல் ஹலியின் அப்துல் ஹலிம் தெரிவித்தார், இந்த நடவடிக்கையானது ஈப்போவில் உள்ள மெனாரா ஹசில் வளாகத்தில் தொடங்கியது.

 இந்நிகழ்ச்சியில் வரி இணக்கப் பிரிவு தலைமை அதிகாரி முகமட் ஃபவ்ஸி சாஹாட் மேலும் ஹசில உயர்நிலை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இம்முறை பேராக் முழுவதும் வரி ஏய்ப்பில் சம்பந்தப்பட்டிருக்கின் றனர் என்று சந்தேகிக்கப்படும் 676 இடங்களில் இந்நட வடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதில் 227 அதிகாரிகள் பங்கேற்பர் என்றும் சொன்னார் .

இந்த நடவடிக் கைக்கு ஒப் கிந்தா என்று பெயரிடப்பட்டுள்ளது. 5 முக்கியத் துறைகளில் சோதனை நட வடிக்கைகள் மேற்கொள் எப்படும். கட்டுமானம், சொத்து, தயாரிப்பு, விவசாயம்,வியாபாரம் ஆகிய துறைகளில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்த அவர், வரி தணிக்கையில் கவனம் செலுத் தப்படும் என்றும் சொன்னார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தி யிருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்படும்.

வரி ஏய்ப்பு நிகழ்ந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இ-இன்வாய்ஸ் அமலாக்கம், வருமானம் தணிக்கை, வரு மான வரி செலுத்துதல் போன்றவை இந்நடவடிக்கை யின் போது ஆழமாக ஆய்வு செய்யப்படும் என்று கைருல் ஹலிமின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here