கோலாலம்பூர்:
வரும் வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 2 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என்று, தேசிய நெடுஞ்சாலை வாரியம் (PLUS) அறிவித்துள்ளது.
ஹஜ்ஜுப் பெருநாளுடன் இணைந்து பள்ளி விடுமுறையும் வருவதால் நெடுஞ்சாலைகளில் அதிகமான வாகன நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் உச்சக்கட்டமான ஒரு நாளைக்கு இரண்டு மில்லியனுக்கு அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம்.
இந்நிலையில் வரும் ஜூன் 5, 6, ஜூன் 8 முதல் 9 வரை நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அது சாலைப்பயனர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



















