அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை-பிரதமர்

தற்போது அமைச்சரவையை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இரு அமைச்சர்கள் பதவி விலகுவதாக முடிவு செய்திருந்த போதிலும், அரசாங்கம் வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 28ஆம் தேதி, பொருளாதார அமைச்சரான, ரஃபிசியும் இயற்கை வளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை அமைச்சரான நிக் நஸ்மியும் தங்களின் பதவி விலகல் கடிதங்களை பிரதமரிடம்
சமர்ப்பித்தனர்.

ரஃபிசியின் பதவி விலகல், ஜூன் 17-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், Nik Nazmi-யின் பதவி விலகல் ஜூலை 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here