PH க்கு வாக்களிப்பது ஹராம் எனக் கூறியது தொடர்பில் முஹிடினிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர்:

க்காத்தான் ஹராப்பானின் பூலாய் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான சுஹைசானுக்கு வாக்களிப்பது ஹராம் அல்லது பாவம் என்று கூறியது தொடர்பில், இதுவரை இரண்டு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இன்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய இன்று செவ்வாய்க் கிழமை காலை 9.28 மணிக்கு கருப்பு நிற எம்பிவியில் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) கட்டிடத்திற்கு முஹிடின் வந்துள்ளார்.

அவர் கட்டிடத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, MIDA அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவர், பிரதான நுழைவாயிலில் காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், MIDA வளாகத்தில் இருக்கும் போது எந்தவிதமான கவரேஜ் அல்லது புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

புக்கிட் அமான் சிஐடியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் பெரிகாதான் நேஷனல் தலைவரை ஏற்கனவே தொடர்பு கொண்டுள்ளதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here