தெங்கு ஜஃப்ருலுக்காக மாநிலத் தொகுதியை காலி செய்கிறேனா? நிராகரித்த அமிருடின்

அம்னோவில் இருந்து வெளியேறி பிகேஆரில் சேர விரும்பும் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் அடுத்த இடைத்தேர்தலில் பிகேஆரை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட வழி வகுக்கும் வகையில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தனது சுங்கை துவா மாநிலத் தொகுதியை விட்டுக்கொடுக்க உள்ளதாக எழுந்த ஊகங்களை மறுத்துள்ளார். சமூக ஊடகங்கள் வழியாக அந்தக் கதையைப் பரப்ப முயன்ற சிலரின் “கற்பனையின்” அடிப்படையில் இது வெறும் வெற்றுப் பேச்சு என்று அமிருடின் கூறியதாக சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் நடந்ததுபோல் “காஜாங் நகர்வு” மீண்டும் நிகழக் கூடாது என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நினைவுறுத்தினார். இது மறைந்த அப்துல் காலிட் இப்ராஹிம் அப்போதைய சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை ராஜினாமா செய்வதில் ஆரம்பித்தது. “காஜாங் நகர்வு” என்பது 2014 ஆம் ஆண்டில் காஜாங் மாநிலத் தொகுதியில் இடைத்தேர்தலைத் தூண்டும் பிகேஆரின் திட்டத்தைக் குறிக்கிறது. காலிட் கட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவர் என்று கருதப்பட்டதால், காலிட்டிற்க்குப் பதிலாக அன்வார் இப்ராஹிமை அடுத்த சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

அன்வாரின் ஓரினச்சேர்க்கை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை தோல்வியடைந்தது, இறுதியில் அஸ்மின் அலி மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டார். காலிட்டின் மாநில அரசாங்கம் ஆரம்பத்தில் சட்டமன்றத்தில் உறுதியான பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும், இந்த சம்பவம் சிலாங்கூரில் அரசியல் நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியதாக அமிருடின் கூறினார்.

நான் (நான் பதவியை காலி செய்வேன் என்று நினைக்கவில்லை). நான் (மந்திரி பெசாராக) எனது பதவிக் காலத்தை முழுமையாக முடிக்க விரும்புகிறேன். மேலும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த விரும்புகிறேன். ஏனெனில் நாம் தீர்க்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. இதை (ஊகம்) நீடிக்க வேண்டிய அவசியமில்லை. “(PKR) எங்கள் தலைமையை சீரமைப்பதிலும், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் ஒற்றுமை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வரவிருக்கும் சபா தேர்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சரான தெங்கு ஜஃப்ருல் கடந்த வாரம் அம்னோவை விட்டு வெளியேறி, பிகேஆரில் சேர விருப்பம் தெரிவித்தார். செனட்டராக அவரது இறுதி பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைவதால், அவரது அமைச்சர் பதவி குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. மேலும், ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ததால், அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பும் உள்ளது.

நேற்று ஒரு பேஸ்புக் வீடியோவில், முன்னாள் அம்னோ தலைவர் இஷாம் ஜலீல், தெங்கு ஜஃப்ருல் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்க அமிருடின் தனது சுங்கை துவா இடத்தை காலி செய்ய உத்தரவிடப்படும் என்று கூறினார். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது, முன்னர் ஊகிக்கப்பட்டபடி, தெங்கு ஜஃப்ருல் மந்திரி பெசாராகப் பொறுப்பேற்க அனுமதிக்கும். அதே நேரத்தில் அமிருடின் தற்போது கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அன்வாரின் அமைச்சரவையில் சேரவும் வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here