பெட்டாலிங் ஜெயா:
அமெரிக்காவிற்கான புதிய மலேசிய தூதராக டான் ஸ்ரீ முகமட் ஷாருல் இக்ராம் யாகோப் நியமிக்கப்பட்டுள்ளார்.
“இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விழாவின் போது இந்தக் கடிதம் வழங்கப்பட்டது” என்று வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொடர்பு மற்றும் பொது இராஜதந்திரப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவரின் பணி நியமனத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
கடந்த 34 ஆண்டுகளாக ஷாருல் அரச தந்திர பொது சேவை துறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன் அவர் பெய்ஜிங், வாஷிங்டன் ஆகிய அரச தந்திர திட்டங்களில் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















