ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுமியின் சடலம் கண்டெடுப்பு

சிபு:

சாங் ஆற்றில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புத்ரி நசருல் அக்மல் என நம்பப்படும் சிறுமியின் உடல் புதன்கிழமை (ஜூன் 4) காலை 10 மணியளவில், அவரது வீட்டிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலதிக நடவடிக்கைகளுக்காக உடல் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி திங்கள்கிழமை (ஜூன் 2) காலை 8 மணியளவில் மூன்று நண்பர்களுடன் ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here