சிலாங்கூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரும் பாடகருமான ஒருவரை போலிசார் கைது செய்ததாக புக்கிட் அமான் குற்றவியல் புலன்விசாரணை இலாகா பாலியல், பெண்கள், குழந்தைகள் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் சித்தி கம்சியா ஹசான் உறுதிப்படுத்தினார்.
17 வயது பாதிக்கப்பட்ட பெண், தான் பணிபுரிந்த ஒரு கஃபேயில் சம்பந்தப்பட்ட கலைஞரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
பல சந்திப்புகளுக்குப் பிறகு, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை ஒரு ஹோட்டலுக்கு சந்திக்க அழைத்துச் சென்றார். அப்போது சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக நம்பப்படுகிறது.
மேலும் விசாரணைக்கு உதவுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார். பின் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.









