இரு நாட்களுக்கு முன்னர் புக்கிட் கம்பீரில் ஆடவர் ஒருவர் தமது மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் குடும்ப பிரச்சனையினால் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீஸ் நம்புகிறது.
Kampung Pengkalan Kota Durian Chondong-இல் தமது மாமியார் வீட்டில் பல வாகனங்களை எரித்த சம்பவம் தொடர்பில் அச்சந்தேக நபரை நேற்று காலை போலீஸ் கைது செய்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரின்டென்டன் ரோஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார்.
புதன்கிழமை தொடங்கி ஏழு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
புக்கிட் கம்பீரில் பெண்ணை கழுத்தறுத்துக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர், பின்னர் மூவார், பாகோவில் உள்ள தமது மாமியார் வீட்டையும் எரிக்க முயற்சித்ததாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.







