நஸ்லெனின் ‘ஆலப்புழா ஜிம்கானா’…ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘ஆலப்புழா ஜிம்கானா’. இதில் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர் . ஒரு ஜாலியான காமெடி ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவான இப்படம் கடந்த மாதம் 10-ந் தேதி வெளியானது.

மம்முட்டியின் ‛உண்ட’ மற்றும் டொவினோ தாமஸின் ‛தள்ளுமால’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் இயக்கிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் பல மொழிகளில் சோனி லிவ் தளத்தில் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here