இன்று காலை நாடு முழுவதுமுள்ள நெடுஞ்சலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர்:

இன்று காலை 9 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (PLUS), கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (LPT) 1 மற்றும் 2 மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறைக்குப் பிறகு பலர் இன்னும் வீடு திரும்பாததால் போக்குவரத்து இவ்வாறு சீராக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக இன்று PLUS நெடுஞ்சாலையில் மொத்தம் 30 ஸ்மார்ட் பாதைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இதற்கிடையில், கிளந்தானில், குவா முசாங்-கோலா லிபிஸ் சாலை மற்றும் கிளந்தான்-திரெங்கானு எல்லையிலும் இன்று காலை வாகனங்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு இருந்தபோதிலும் போக்குவரத்து சீராக இருந்தது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here