உலகமயமாக்கல் சவால்களை எதிர்கொள்ளும் தயார்நிலை நடவடிக்கையாக குறிப்பாக இளம் தலைமுறையினர் அடிப்படை கட்டமைப்புடன் தங்களை முழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
காரணம் இளம்தலைமுறையினர் மத்தியில் அறிவு கலாச்சாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது. எனவே அந்தச் சூழலை அத்தரப்பினர் புரிந்து கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக மக்களுக்கு நவீனமயம், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்களில் பயிற்சி அளிப்பதோடு அடிப்படை அம்சங்களை வலுவடையச் செய்து மடானி மக்களின் கண்ணியத்தை உயர்த்துவதற்கு நான் முனைகின்றேன்.
![]()
அது நம்மை அடிப்படை கட்டமைப்புடன் முழுமைப் படுத்திக் கொள்வதற்கு குறிப்பாக கற்றல், அறிவு அடிப்படை, வலு அம்சங்களுக்கான அர்த்தத்தை வழங்கி சவால் விடுக்கின்றது என்று நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சருமான அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்சிசியில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக், பிரதமர்துறை (சமய விவகாரங்கள் துணை அமைச்சர்) டாக்டர் ஸுல்கிப்ளி ஹசான்,மாரா தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.




















